/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; மழைக்கு சேறும் சகதியுமாகி சின்னகாயார் சாலை சீரழிவு
செங்கல்பட்டு: புகார் பெட்டி; மழைக்கு சேறும் சகதியுமாகி சின்னகாயார் சாலை சீரழிவு
மழைக்கு சேறும் சகதியுமாகி சின்னகாயார் சாலை சீரழிவு
திருப்போரூர் வட்டம், சின்னகாயார் பகுதியில், 40 இருளர் குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் செல்லும் சாலை, சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை வழியாக, இருளர் மக்கள் உட்பட விவசாயிகளும் செல்கின்றனர்.தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, சேற்றில் நடக்கும் மக்களுக்கு, காலில் சேற்றுப்புண் உள்ளிட்ட நோய் ஏற்படும் சூழல் உள்ளது.அதில், நடக்கவே மக்கள் அஞ்சுகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கோ.முருகேசன், காயார்.