உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்த மாணவர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

செங்கல்பட்டு: புகார் பெட்டி; சேதமடைந்த மாணவர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த மாணவர் விடுதி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

செய்யூர் பஜார் பகுதியில், சித்தாமூர் சாலை ஓரத்தில், அரசு மாணவர் விடுதி உள்ளது. இதில், 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.விடுதி சுற்றுச்சுவர், கடந்த ஆண்டு பருவமழையின் போது இடிந்து விழுந்தது. அது, தற்போது வரை சீரமைக்கப்படாததால், விடுதி வளாகத்தில் நாய், மாடு போன்ற கால்நடைகள் உலா வருகின்றன.இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஏ.முருகன், சித்தாமூர்....................

ஊரப்பாக்கம் பிரதான சாலையில் குப்பை கொட்டி அட்டூழியம்

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி பிரியா நகர் பிரதான சாலை நுழைவாயில் பகுதியில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டி வந்தனர்.நுழைவு வாயில் பகுதியில் குப்பையை கொட்டுவதால், அதை கால்நடைகள் இழுத்து சாலையில் போடுகின்றன. அதனால், அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளன.இதை கருத்தில் கொண்டு, குப்பை கொட்ட தடை விதித்து, விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதில் தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது.தொடர்ந்து, இப்பகுதியில் குப்பை கொட்டுவோரை கண்காணித்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.- எஸ்.முரளிதரன், ஊரப்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ