உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் டிசம்பரில் திறப்பு

செங்கல்பட்டு ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் டிசம்பரில் திறப்பு

சென்னை, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 22.14 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் செங்கல்பட்டு ரயில் நிலையம் வரும் டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களுக்கு, செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக இருக்கிறது. இங்கிருந்து கடற்கரை, காஞ்சிபுரத்துக்கு 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 60,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதற்கிடையே, பயணியர் கூடுதல் வசதி பெறும் வகையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 22.14 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நுழைவாயில் மேம்படுத்துவது, புதிய கட்டிடம், பயணியர் காத்திருப்பு அறைகள், பாதசாரிகள் நடைபாதைகள், நடைமேடைகளில் புதிய கூரைகள், புதிய லிப்ட்கள் அமைப்பது, நான்கு நடைமேடைகளில் எஸ்கலேட்டர்கள் வசதி, டிக்கெட் கவுன்ட்டர்கள், நடைமேடைகள் விரிவாக்கம், பயணியர் தகவல் தெரிவிக்கும் டிஜிட்டல் பலகைகள், வாகன நிறுத்தம் வசதி, உணவகங்கள் உள்ளிட்ட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்த ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள் அனைத்தும் வரும் டிச., மாதத்துக்குள் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை