உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சென்னை - மாமல்லை இ.சி.ஆர்., ஏப்., 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு

சென்னை - மாமல்லை இ.சி.ஆர்., ஏப்., 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு

மாமல்லபுரம்:சென்னை அக்கரை -- மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, திருத்திய கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், கிழக்கு கடற்கரை சாலையை பராமரித்து, சுங்க கட்டண சாலையாக நிர்வகிக்கிறது.இத்தடத்தில் கடக்கும் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் சுங்க கட்டணம், ஆண்டுதோறும் ஏப்., 1ம் தேதி முதல் உயர்த்தப்படும்.கடந்த ஆண்டு, லோக்சபா தேர்தல் காரணமாக, ஏப்ரலில் உயர்த்தப்படாமல், தேர்தல் முடிந்து ஜூன் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.தற்போது, வழக்கம் போல், ஏப்., 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டு, திருத்திய கட்டணம் நடைமுறைக்கு வருகிறது.அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, புதிய கட்டணம் நடைமுறையில் இருக்கும் என, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை