மேலும் செய்திகள்
வெங்காடு சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
16-Jul-2025
மறைமலை நகர்,செட்டிபுண்ணியம் டாக்கா நகர் பகுதியில், புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், செட்டிபுண்ணியம் ஊராட்சி டாக்கா நகர் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. புறநகரில் வளர்ந்து வரும் முக்கிய நகர் மற்றும் மகேந்திரா சிட்டியின் அருகில் உள்ள தால், நாளுக்கு நாள் இந்த பகுதியில் குடியி ருப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், டாக்கா நகர் பகுதியில் உள்ள தெரு சாலைகள், மிகவும் சிதிலமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளன. இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்லும் போது, டயர் பஞ்சராகி அவதிப் படுகின்றனர். வாகனங்களை இயக்க முடியாமல், தடுமாறி வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16-Jul-2025