உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ-வீலரில் பறக்கும் சிறுவர்கள் செய்யூர் பகுதியில் விதிமீறல்

டூ-வீலரில் பறக்கும் சிறுவர்கள் செய்யூர் பகுதியில் விதிமீறல்

செய்யூர்:செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், இருசக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளதால், போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட சித்தாமூர் மற்றும் லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், 84 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி முழுதும் கிராமப்புறங்களாக உள்ளன. இப்பகுதிகளில், 18 வயது நிரம்பாத சிறுவர்கள், முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்கள் ஓட்டுகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்பட்டு, மற்ற வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக செய்யூர் - போளூர் மாநில நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை, மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலை என, போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில், நண்பர்களுடன் இணைந்து இருசக்கர வாகனம் ஓட்டுகின்றனர். அப்போது, போக்குவரத்து விதிகளை மீறி ஹெல்மெட் அணியாமல், மூன்று நபர்களுக்கு மேல் ஒரே வாகனத்தில் அதிவேகமாக செல்கின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் முக்கிய சாலைகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமீறலில் ஈடுபடும் சிறுவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி