உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சின்னகளக்காடி சாலை சேதம் தண்ணீரும் தேங்குவதால் அவதி

சின்னகளக்காடி சாலை சேதம் தண்ணீரும் தேங்குவதால் அவதி

சூணாம்பேடு, சின்னகளக்காடி சாலை சேதமடைந்து, பள்ளங்களில் தண்ணீரும் தேங்குவதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேலுார் கிராமத்தில் இருந்து, சின்னகளக்காடி செல்லும், 2 கி.மீ., துாரமுள்ள தார்ச்சாலை உள்ளது. வேலுார், சின்னகளக்காடி, பனையடிவாக்கம் உள்ளிட்ட, ஐந்திற்கும் மேற்பட்ட கிராமத்தினர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை பராமரிப்பின்றி, கடுமையாக சேதமடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர்.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை