உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உடல்களை அடக்கம் செய்ய குரோம்பேட்டையில் தவிப்பு

உடல்களை அடக்கம் செய்ய குரோம்பேட்டையில் தவிப்பு

குரோம்பேட்டை:தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், குரோம்பேட்டை, பாரதிபுரத்தில் சுடுகாடு உள்ளது. பாரதிபுரம், மாணிக்கம் நகர், பெரியார் நகர், குமரபுரம், ராதா நகர் மக்கள், இந்த சுடுகாட்டை பயன்படுத்தி வருகின்றனர்.மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால் செடி, கொடிகள் வளர்ந்து, காடுபோல் மாறிவிட்டது. தவிர மின் விளக்கு, சரியான பாதை போன்ற வசதிகள் இல்லை.சாணம் கொட்டும் இடமாக, சுடுகாட்டை மாற்றிவிட்டனர். இதனால், உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.இரவில், உடல்களை அடக்க செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், மின் விளக்கு இல்லாததாலும், பாம்பு தொல்லையாலும், பகுதிவாசிகள் சிரமப்படுகின்றனர். அதனால், உடல்களை வேறு சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது.கிராமப்புறங்களில் கூட, சுடுகாட்டை முறையாக பராமரிக்கும் நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் காடாக இருப்பது, பகுதிவாசிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சுடுகாட்டை சுத்தம் செய்து, மின் விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை