உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஊராட்சி தலைவர் உறவினர் இறுதி ஊர்வலத்தில் மோதல்: 6 பேர் காயம்

ஊராட்சி தலைவர் உறவினர் இறுதி ஊர்வலத்தில் மோதல்: 6 பேர் காயம்

கூவத்துார்:கூவத்துார் அடுத்த கடலுார் பெரியகுப்பத்தை சேர்ந்தவர் ஆதிலட்சுமி, மீனவர். இவர் கடலுார் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.கடந்த சில மாதங்களாக ஊராட்சி மன்ற தலைவர் தரப்பிற்கும், அதே பகுதியை சேர்ந்த மீனவர் தரப்பிற்கும் கருத்து வேறுபாட்டால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.ஊராட்சி மன்ற தலைவர் ஆதிலட்சுமியின் மாமியார் காந்தா 90, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.நேற்று மாலை இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவருக்கும், இறுதி ஊர்வலத்தில் வந்தவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இறுதி ஊர்வலத்தில் வந்தவர்கள் சிலர் ஆட்டோ டிரைவரை தாக்கினர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆட்டோ ஓட்டுனரின் தரப்பினர் இறுதி ஊர்வலத்தில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கைகலப்பாக மாறி இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். மோதலில் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த கூவத்துார் போலீசார் காயமடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறுதி ஊர்வலத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமென, ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் காத்தான்கடை இ.சி.ஆர்., சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.கூவத்துார் போலீசார் பேச்சு நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் பேராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இரு தரப்பினருக்குள் மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை