செய்யூர் அரசு கல்லுாரியில் வகுப்புகள் துவக்கம்
செய்யூர், புதிதாக துவக்கப்பட்டுள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்கப்பட்டன.செய்யூர் வட்டத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கடந்த மாதம் துவக்கப்பட்டது.இந்த கல்வி ஆண்டிற்கு ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ் 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, மூன்று கட்டங்களாக கலந்தாய்வுகள் நடந்து வருகின்றன.தற்போது வரை 140 பேர் கல்லுாரியில் சேர்க்கை பெற்றுள்ள நிலையில், நேற்று கல்லுாரி வகுப்புகள் துவக்கப்பட்டன.புதிதாக கல்லுாரியில் சேர்ந்துள்ள மாணவ - மாணவியருக்கு செய்யூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாபு இனிப்பு வழங்கி வரவேற்று, கல்லுாரி வகுப்புகளை துவக்கி வைத்தார்.