மேலும் செய்திகள்
முன்னாள் படைவீரர் குறைதீர்வு கூட்டம்
29-May-2025
செங்கல்பட்டு:தஞ்சாவூர் பாரத் கல்லுாரி வளாகத்தில், ஸ்டார் குளோபல் இன்டர்நேஷனல் சார்பில், அல்டிமேட் உலக சாதனையாளருக்கான கராத்தே, யோகா மற்றும் சிலம்ப போட்டிகள், கடந்த 11ம் தேதி நடந்தன. இதில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலிகுப்பம் மீனவ பகுதியைச் சேர்ந்த விஜய் வித்யாஷ்ரம் பள்ளியைச் சேர்ந்த மாணவி எஸ்.தீக் ஷிதா, தனிநபர் யோகா பிரிவில் பங்கேற்றார்.சக்ராசனம் செய்து கொண்டே, வயிற்றில் மீன் கிண்ணத்தை, 4.30 நிமிடங்கள் தொடர்ந்து சுமந்து, உலக சாதனை செய்தார். இதையடுத்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ், யோகாவில் உலக சாதனை படைத்த மாணவி தீக் ஷிதாவுக்கு பாராட்டு தெரிவித்தார். செங்கல்பட்டு சப் - கலெக்டர் மாலதி ெஹலன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
29-May-2025