மேலும் செய்திகள்
பொது அரசு பஸ் ஓட்டுநர் கார் மோதி பலி
10-Apr-2025
அச்சிறுபாக்கம் அருகே லாரி மோதி ஒருவர் பலி
10-Apr-2025
மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம் பேரூராட்சி, வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த பாலமுரளி என்பவரது மகன் பிரபஞ்சன், 18.இவர், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.நேற்று, தன் நண்பர்களான பாலகணேஷ், யோகேஸ்வரன் ஆகியோருடன், செய்யூர் -- சோத்துப்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், சித்தாமூர் நோக்கி,'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.அப்போது, பொறையூர் அருகே, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், சித்தாமூரிலிருந்து எதிர் திசையில்,'ஸ்பிளெண்டர் பிளஸ்' 'பைக்'கில் வந்துள்ளனர்.எதிர்பாராத விதமாக, இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதின.இதில் பிரபஞ்சன் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்மருவத்துார் போலீசார், பிரபஞ்சனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தில் லேசான காயமடைந்த மற்றவர்களை மீட்டு, மேல்மருவத்துார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, விபத்தில் சிக்கிய பைக்குகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
10-Apr-2025
10-Apr-2025