மின்சாரம் குறித்த போட்டி மாணவர்களுக்கு பரிசு
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், மின்சாரம் தொடர்பான பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு குறித்த கட்டுரைப் போட்டி, வினாடி - வினா போட்டிகளை நடத்தின.இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, செங்கல்பட்டு தனியார் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில துணைத் தலைவர் மாதவன் தலைமையில், நடந்தது.சப்- கலெக்டர் நாராயண சர்மா, மேற்பார்வை மின் பொறியாளர் அன்புச்செல்வன், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் ஆகியோர் பங்கேற்று, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.