உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி

மழைக்கு சேதமான சாலைபெருமாட்டுநல்லுாரில் அவதிகாட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, பகவதிபுரம் சுவாதி நகர் பகுதி சாலை, மண் சாலையாகவும், போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையிலும் உள்ளது. அச்சாலை, தற்போது பெய்த மழையில், சகதியாக உள்ளது.இந்த சாலையை சீரமைக்கக்கோரி, ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எங்கள் பகுதிக்கு, அடிப்படை வசதிகளான சாலை, தெரு விளக்கு, குடிநீர் வசதிகளை செய்து தர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.மணி, பெருமாட்டுநல்லுார்.புதர் மண்டிய வடிகால்வாய் சீரமைக்க வலியுறுத்தல்ஆத்துார் ஊராட்சி, தென்பாதி பகுதியில், மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இப்பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில், மழை காலங்களில், மழைநீர் சீராக செல்ல வழியின்றி, அப்பகுதிவாசிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.தற்போது, மழைநீர் வடிகால்வாயில் புதர் மண்டி, செடி கொடிகளுடன் உரிய பராமரிப்பின்றி கிடக்கிறது. எனவே, மழைநீர் வடிகால்வாயை சீரமைத்து, மழைநீர் சீராக செல்வதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.சுந்தரி, ஆத்துார்.பள்ளிப்பேட்டை சாலையோரம்குப்பை குவியலால் துர்நாற்றம்அச்சிறுபாக்கம் ஒன்றியம், பள்ளிப்பேட்டை ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெரு செல்லும் சாலை அருகே, பிளாஸ்டிக் குப்பை மற்றும் ஹோட்டல் உணவு கழிவுகள் குவிந்துள்ளன.அதனால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகின்றன. அதோடு, அவை காற்றில் பறந்து, அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுகின்றன. மழைக்காலம் என்பதால், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்படும் சூழல் உள்ளது.சாலை ஓரத்தில் உள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும். மீண்டும் குப்பை கொட்டாதவாறு, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.- சங்கர், மதுராந்தகம்.மின் மாற்றியை சுற்றி தேங்கும்மழைநீரால் விபத்து அபாயம்மறைமலை நகர் சிப்காட் பகுதி பெரியார் சாலை இறுதியில், சாலையோரம் மறைமலை நகர் மின்வாரிய அலுவலகம் சார்பில், மின் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.இந்த மின் மாற்றியை சுற்றி, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதோடு, குப்பையும் குவிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், மின் மாற்றியை சுற்றி மண் கொட்டி, அந்த பகுதியை சமன் செய்ய, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ப.சீனிவாசன், மறைமலை நகர்.கரடு முரடான சாலையை சீரமைக்கஊத்துக்குழிவாசிகள் எதிர்பார்ப்புதிருப்போரூர் அடுத்த ஊத்துக்குழி கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.வண்டலுார்- - கேளம்பாக்கம் சாலையிலிருந்து பிரிந்து, இப்பகுதிக்கு செல்லும் சாலை கரடு முரடாக உள்ளது. அதனால், இதன் வழியாக செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர்.வாகனங்களுக்கும் பழுது ஏற்படுகிறது. சாலையில் உள்ள மண் திட்டுக்கள் காற்றில் பறந்து கண்களில் படுவதால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.எனவே, மேற்கண்ட சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.மணிமாறன், ஊத்துக்குழி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி