புகார் பெட்டி
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம்அபிராம் நகரில் சுகாதார சீர்கேடுஊரப்பாக்கம் ஊராட்சி, அபிராம் நகர் இரண்டாவது தெருவில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேக்கம் அடைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் தனி நபர் ஒருவர், சாலையை ஆக்கிரமித்து கார் பார்க்கிங் செய்துள்ளார்.இதனால், மழை மற்றும் கழிவுநீர் சீராக செல்ல வழியின்றி, அப்பகுதியில் தேக்கமடைந்துள்ளது. இது குறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, சாலை ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் மற்றும் கழிவுநீர் சீராக செல்வதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மூ.சகுந்தலாதேவி, ஊரப்பாக்கம்.திருப்போரூர் மயான பாதையைசீரமைக்க எதிர்பார்ப்புதிருப்போரூர் நகர பகுதிக்குரிய மயானம், மார்க்கெட் வழியாக செல்லும் பாதையில் உள்ளது. இந்த சாலை, மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை, 15 ஆண்டுக்கு முன் போடப்பட்டது. அதனால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, ஆங்காங்கே பள்ளங்களுடன் காட்சி அளிப்பதால், சடலத்தை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, புதிய சாலை அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.பாலாஜி, திருப்போரூர்.குழாய் இணைப்பில் உடைப்புவீணாகும் பாலாற்று குடிநீர்செங்கல்பட்டு பாலாற்றில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலையில் பூமிக்கு அடியில் பாலாற்று குடிநீர் குழாய் இணைப்புகள், கூடுவாஞ்சேரி பகுதிகளுக்கு செல்கின்றன.இதில், காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில், குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.இதன் காரணமாக, அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, உடைந்த குடிநீர் இணைப்புகளை சரி செய்ய, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.விக்னேஷ், மறைமலை நகர்.நடைபாதையில் மழைநீர் தேக்கம்மாமல்லை பயணியர் வேதனை மாமல்லபுரத்தில், கலங்கரை விளக்க பாறை குன்றின் கீழ், முற்றுப்பெறாத அர்ஜுனன் தபசு சிற்பம் உள்ளது. அதன் முன்புற சாலையில், கனமழையின்போது, சாலை மற்றும் சிமென்ட் கல் நடைபாதையில், மழைநீர் பெருக்கெடுத்து தேங்குகிறது.அதனால், அப்பகுதி பாதசாரிகள், சுற்றுலா பயணியர் மழைநீரில் நடக்க சிரமப்படுகின்றனர். பல நாட்கள் சேறும் சகதியுமாக உள்ளதால், சாலையில் விபத்து அபாயத்தில் கடக்க வேண்டிய சூழல் உள்ளது.இப்பகுதியில் மழைநீர் பெருக்கெடுப்பதை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.ராஜா, மாமல்லபுரம்பேரமனுாரில் குவிந்துள்ள குப்பைதுர்நாற்றத்தால் அவஸ்தைமறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட, 18வது வார்டு பேரமனுார் கிராமத்தில் உள்ள ரயில்வே தெருவில், வீடுகளுக்கு மத்தியில் குப்பை தேக்கமடைந்துள்ளது.இங்கு தேங்கியுள்ள குப்பையை அகற்றக்கோரி, நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் மனு அளித்தும், இதுவரை குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.மழைநீர் குப்பையில் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகமாகி, அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே, தேங்கியுள்ள குப்பையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ராமகிருஷ்ணன், பேரமனுார்.மழைக்கு மோசமான சாலைசீரமைக்க வேண்டுகோள்மறைமலை நகர் நகராட்சி, ரயில் நகரில் இருந்து வல்லாஞ்சேரி செல்லும் ஏரிக்கரை சாலை, மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர்.இந்த சாலை, தற்போது பெய்த மழையில் மிகவும் சேதமாகி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையில் இருப்பதால், அதில் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்வோர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.எனவே, சேதமான சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.பாலசந்திரன், மறைமலை நகர்.