/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புகார் பெட்டி:சாலையில் கழிவுநீர் வெளியேற்றி தனியார் லாரிகள் அடாவடி
புகார் பெட்டி:சாலையில் கழிவுநீர் வெளியேற்றி தனியார் லாரிகள் அடாவடி
சாலையில் கழிவுநீர் வெளியேற்றி தனியார் லாரிகள் அடாவடி
திருப்போரூர் பேரூராட்சியில், சவுபாக்கியா நகர் செல்லும் சாலை உள்ளது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து கழிவுநீர் லாரிகள் வாயிலாக எடுக்கப்படும் கழிவுநீரை, சில கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், இந்த சாலையில் விடுகின்றனர்.இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, இந்த சாலையோரம் கழிவுநீர் விடுவதை தடுக்கவும், அங்கு துாய்மைப் பணி மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- என்.பிரேம்குமார், திருப்போரூர்.