உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புகார் பெட்டி : சாலை நடுவே பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் பீதி

புகார் பெட்டி : சாலை நடுவே பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் பீதி

சாலை நடுவே பள்ளங்கள்: வாகன ஓட்டிகள் பீதிமதுராந்தகம் அடுத்த நெட்ரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தாமூர் கிராமத்தில் இருந்து ஒழவெட்டி கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது.இந்த சாலையில், தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.கடந்த சில ஆண்டுகளாக, சாலை நடுவே ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் இரவு நேரத்தில் செல்பவர்கள், இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது, சிலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ச.கண்ணன், சித்தாமூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ