புகார் பெட்டி:மாணவர்கள் நடந்து செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும்
மாணவர்கள் நடந்து செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும்
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட நயினார்குப்பம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.நயினார்குப்பம் பகுதியில் இருந்து குழந்தைகள் நடந்து செல்லும் சாலை நடுவே மழைநீர் பெருக்கெடுப்பதால், குழந்தைகள் சாலையைக் கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பள்ளி குழந்தைகள் செல்லும் சாலை நடுவே, மழைநீர் வடிகுழாய் அமைக்க வேண்டும்.- ஆ.சுரேஷ், செய்யூர்.