புகார் பெட்டி: குடிநீரின்றி தவிப்பு
குடிநீரின்றி தவிப்புசெங்கல்பட்டு மாவட்டம், மேலமையூர் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ., நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதிக்கு குடிநீர் சரியான முறையில் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், குடிநீர் மீட்டரும் செயல்படாமல் உள்ளது. இப்பகுதிக்கு குடிநீர் சரியாக வராததால், இப்பகுதியில் வசிப்போர் குடிநீருக்காக அலையும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே, கூட்டு குடிநீர் துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, இப்பகுதிவாசிகளுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.ராகுல், மேலமையூர்.