உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கான்கிரீட் சாலை பணி விறுவிறு

கான்கிரீட் சாலை பணி விறுவிறு

மதுராந்தகம், மதுராந்தகம் நகராட்சி, செல்லியம்மன் கோவில் தெரு பகுதியில், கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 'அம்ருத் - 2' திட்டத்தின் கீழ், வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்க, சாலைகளில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ஆங்காங்கே, சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. இதனால், சாலைகள் மிகவும் சேதம் அடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து, வன்னியர்பேட்டை மற்றும் செல்லியம்மன் கோவில் தெரு பகுதிகளில், நகராட்சி பொதுநிதி, 36 லட்சம் ரூபாய் மதிப்பில், 530 மீட்டர் துாரம் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன், சாலை பயன்பாட்டுக்கு தயாராகிவிடும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ