உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விமான விபத்து அட்வகேட் அசோசியேஷன் இரங்கல்

விமான விபத்து அட்வகேட் அசோசியேஷன் இரங்கல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அட்வகேட் அசோசியேஷன் சார்பில், ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பயணியருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நேற்று, ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.குஜராத், ஆமதாபாதில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட, 242 பேருடன் புறப்பட்ட, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி ஒன்றின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 241 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டும் காயங்களுடன் உயிர் தப்பினார்.இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அட்வகேட் அசோசியேஷன் சார்பில், விமான விபத்தில் உயிரிழந்த பயணியருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி, தலைவர் சிவகுமார் தலைமையில், நேற்று நடந்தது.தமிழ்நாடு பார் கவுன்சிலர் உறுப்பினர் வரதன், செயலர் பாஸ்கரன் உள்ளிட்ட நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும் சிகிச்சை பெற்று வருபவர் நலம் பெற்று வருவதற்கும் பிரார்த்தனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை