வீட்டின் பூட்டை உடைத்து கட்டுமான பொருள் திருட்டு
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமம், தெற்கு மாடவீதியில் வசிப்பவர் ராமலிங்கம்,78; ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர், செம்பாக்கம் - அச்சரவாக்கம் சாலையில் இடம் வாங்கி, அங்கு வீடு கட்டி வருகிறார்.அந்த இடத்தின் ஒரு பகுதியில், சிமென்ட் ஓடு போட்ட ஒரு சிறிய வீட்டில் கட்டுமான பொருட்கள், மின்மோட்டார் போன்றவற்றை வைத்து பூட்டி வைத்திருந்தார்.சமீபத்தில், ராமலிங்கம் வீட்டை பார்க்க சென்ற போது, பொருட்கள் வைத்திருந்த சிறிய வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, 50,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டது தெரிந்தது. அதே வீட்டில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பும், இதே போல் திருட்டு நடந்துள்ளது.ராமலிங்கம், திருப்போரூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.