உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / முடிச்சூருக்கு மூடுகால்வாய் பணி வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை

முடிச்சூருக்கு மூடுகால்வாய் பணி வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை

தாம்பரம், தாம்பரம் அடுத்த இரும்புலியூர் கிழக்கு பகுதியில், விமானப்படை பயிற்சி மைய சுற்றுச்சுவரை ஒட்டி, பெரிய ஏரி உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் பெரும்பகுதி குடியிருப்புகளாக மாறிவிட்டன.மழைக்காலத்தில் ஏரி நிரம்பினால், இரும்புலியூர் அருள் நகர் அருகேயுள்ள கலங்கல் வழியாக தண்ணீர் வெளியேறி, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, மேற்கு தாம்பரம் வழியாக அடையாறு ஆற்றுக்கு செல்லும்.அதற்கான முறையான கால்வாய் இல்லாததால், இரும்புலியூர் மற்றும் பீர்க்கன்காரணை பகுதிகள், வெள்ளத்தில் மூழ்குகின்றன.பல ஆண்டுகளாக இப்பிரச்னை நீடித்து வருவதால், அதற்கு தீர்வாக, ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், குடியிருப்புகளை சூழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.அந்த வகையில், இரும்புலியூர் - ரயில்வே லைன் - முடிச்சூர் சாலை வழியாக, அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில், 12,000 அடி நீளத்திற்கு, 96 கோடி ரூபாய் செலவில், 16 அடி அகலம், 9 அடி ஆழ மூடுகால்வாய் கட்டும் பணி, கடந்த ஆண்டு துவங்கியது.முதற்கட்டமாக, இரும்புலியூர் ஏரி முதல் பழைய ஜி.எஸ்.டி., சாலை வரை கால்வாய் கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது.அடுத்தக்கட்டமாக, இரும்புலியூர் டி.டி.கே., நகர் சுரங்கப்பாதை முதல் தாம்பரம் - முடிச்சூர் சாலை வழியாக, 1 கி.மீ., துாரத்திற்கு மூடுகால்வாய் கட்டும் பணி, நேற்று துவங்கியது.இக்கால்வாய் அணுகு சாலையில் அமைவதால், அதன் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, டி.டி.கே., நகர் சுரங்கப்பாதையில்செல்லும் வாகனங்கள், மாற்றுப்பாதை வழியாக, தாம்பரம் - முடிச்சூர் சாலையை அடையும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.மூன்று மாதங்களில் இப்பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இப்பணி முடிந்ததும், அடுத்தக்கட்டமாக ரயில்வே லைனின் பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை