மின்சாரம் பாய்ந்து பசு உயிரிழப்பு
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 44. விவசாயியான இவர், பசுக்கள் வளர்த்து வருகிறார்.இவரது பசு ஒன்று, நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற நிலையில், மீண்டும் திரும்பவில்லை.ரமேஷ் தேடிச் சென்ற போது, கூடலுார் பகுதியில் காலி வீட்டு மனைப் பிரிவில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்து, பசு இறந்து கிடந்தது தெரிந்தது.தகவலறிந்து வந்த மறைமலை நகர் மின் வாரிய அதிகாரிகள், அறுந்து கிடந்த மின் கம்பியை துண்டித்து எடுத்துச் சென்றனர்.இச்சம்பவம் குறித்து ரமேஷ், கருநிலம் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தார்.இரண்டு நாட்களாக அறுந்து கிடந்த மின் கம்பியை, மின் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததே இச்சம்பவத்திற்கு காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.