மேலும் செய்திகள்
விவசாய கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
27-Aug-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே, விவசாய கிணற்றில் விழுந்த பசுவை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். செங்கல்பட்டு அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில், பசு ஒன்று தவறி விழுந்துள்ளதாக, செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு, கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி, கிராம மக்களின் உதவியுடன், கயிறு கட்டி பசுவை பத்திரமாக மீட்டனர்.
27-Aug-2025