உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது புல்லட்டில் சென்ற வாலிபரை முட்டி துாக்கி வீசிய மாடுகள்

பொது புல்லட்டில் சென்ற வாலிபரை முட்டி துாக்கி வீசிய மாடுகள்

ஆவடி, ஆவடி எச்.வி.எப்., குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆதித்யா, 28. கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த இவர், ஆவடி எச்.வி.எப்.,பில், பராமரிப்புத் துறையில் தொழில் பழகுநராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம், மாலை 6:40 மணிக்கு, தேநீர் அருந்திவிட்டு, 'ராயல் என்பீல்டு' புல்லட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.சத்தியமூர்த்தி நகர் சாலையில் சென்றபோது, ஆக்ரோஷமாக சண்டை போட்டுக்கொண்டிருந்த இரண்டு பசு மாடுகள், திடீரென குறுக்கே பாய்ந்து, ஆதித்யாவின் பைக்கை முட்டி துாக்கி வீசின.இதில், சாலையில் விழுந்த ஆதித்யாவுக்கு, வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அருகில் இருந்தோர் அவரை மீட்டு, அருகில் உள்ள எச்.வி.எப்., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தோளில் கட்டு போடப்பட்டது.இதுகுறித்து, திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.புகார் அளித்தால் மாட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ