உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கொளப்பாக்கம் சாலையில் மாடுகள் உலா வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

கொளப்பாக்கம் சாலையில் மாடுகள் உலா வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

கூடுவாஞ்சேரி. நெடுங்குன்றம் ஊராட்சி கொளப்பாக்கம் பிரதான சாலையில் சாலையின் மையப்பகுதியில் மாடுகள் தஞ்சம் அடைந்துள்ளன. மேலும் சாலையில் உலா வருவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒரு வித அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:வண்டலுார் சிக்னலில் இருந்து, கேளம்பாக்கம் செல்லும் ஜி.எஸ்.டி., பிரதான சாலையில் கொளப்பாக்கம் பகுதியில் உள்ள, சாலையில் அதிகமாக மாடுகள் உலா வருகின்றன. மாடுகள் சாலையின் மையப்பகுதியில் நிறுவப்பட்டுள்ள தடுப்புகளில் அமர்ந்து, அதில் உள்ள புல்வெளிகளில் நிரந்தரமாக தங்கி உள்ளன.இந்த சாலையில் வண்டலூரில் இருந்து, கேளம்பாக்கத்திற்கும்,கேளம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்திற்கும், அதிகமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.மாடுகள் சாலையின் மையப்பகுதியில் தங்கி உள்ளதால், திடீரென்று எழுந்து, சாலையின் குறுக்காக ஓடுகிறது. அது அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு, இடையூறாகவும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.சாலையில் உலாவரும் மாடுகளால், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்கி, சாலையில் விழுந்து சிறு சிறு காயங்களுடன் செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து, வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி