உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கலாசார பூங்கா ஒப்பந்த அழைப்பு

கலாசார பூங்கா ஒப்பந்த அழைப்பு

மாமல்லபுரம்:திருவிடந்தையில், 100 கோடி ரூபாய் மதிப்பில் கலாசார நந்தவன பூங்கா அமைக்க, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஒப்பந்தம் கோரி அறிவித்துள்ளது. சென்னைக்கு அருகில், முக்கிய சுற்றுலா இடமாக மாமல்லபுரம் விளங்குகிறது. தற்போது சுற்றுலா மேம்பாடு கருதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், 100 கோடி ரூபாயில், கலாசார நந்தவன பூங்கா அமைக்கப்பட உள்ளது. நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான, 218 ஏக்கர் நிலத்தில், இப்பூங்கா வளாகம் அமைகிறது. இதற்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் அளித்துள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ஏற்கனவே தெரிவித்தார். இத்திட்டத்தின் முதல் தொகுப்பு ஒப்பந்த பணிகளுக்காக, சுற்றுலா வளர்ச்சிக் கழகம், தற்போது ஒப்பந்தம் கோரி அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை