மேலும் செய்திகள்
தந்தையை கொலை செய்து துாங்கிய மகன்
17-Sep-2025
சூணாம்பேடு:சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் நாகப்பன், 46; நரிக்குறவர். கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வசித்து வருகிறார். இவருடன் அதே வளாகத்தில் வசித்து வரும் விஜய், 25, என்ற நரிக்குறவர், சூணாம்பேடு காலனி பகுதியில் இருந்து கோழியை திருடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த 15ம் தேதி இரவு 9:30 மணியளவில், விஜயை நாகப்பன் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர். அப்போது விஜய், அருகே இருந்த அரிவாளால் நாகப்பனின் தலையில் வெட்டிவிட்டு தப்பினார். பலத்த காயமடைந்த நாகப்பன், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூணாம்பேடு போலீசார் வழக்கு பதிந்து, விஜயை நேற்று முன்தினம் கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
17-Sep-2025