உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தரைப்பாலம் சேதம் திருக்கச்சூரில் விபத்து அபாயம்

தரைப்பாலம் சேதம் திருக்கச்சூரில் விபத்து அபாயம்

மறைமலை நகர், மறைமலை நகர் நகராட்சி திருக்கச்சூர் பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் பழமையான தியாகராஜர் கோவில் உள்ளது.இக்கோவில் தெற்குமாடவீதி, காந்தி தெரு சந்திப்பு அருகில் சிறு தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக மழைக்காலத்தில் தண்ணீர் அருகில் உள்ள குளம் மற்றும் ஏரிகளுக்கு செல்கின்றன. இந்த சிறு பாலத்தின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளம் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.எனவே இந்த பகுதியில்ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீர் செய்து புதிய தரைப்பாலம் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி