உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செம்பூண்டியில் தரைப்பாலம் சேதம் சதுர வடிவ பாலம் அமைக்க கோரிக்கை

செம்பூண்டியில் தரைப்பாலம் சேதம் சதுர வடிவ பாலம் அமைக்க கோரிக்கை

மதுராந்தகம்:செம்பூண்டி கிளியாற்று தடுப்பணையில் இருந்து, செம்பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய் தரைப்பாலம் உடைந்துள்ளதால், புதிதாக சதுர வடிவ பாலம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவிலுள்ள செம்பூண்டி கிராமத்தில், அதிக அளவில் விவசாயம் செய்யப்படுகிறது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்பாடி கிராமத்தில் துவங்கும் கிளியாற்றில் இருந்து, மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து, இந்த கிராமத்தின் வழியே சென்று, மதுராந்தகம் ஏரிக்குச் செல்கிறது.இந்நிலையில், செம்பூண்டி கிளியாற்று தடுப்பணையில் இருந்து, செம்பூண்டி ஏரிக்குச் செல்லும் தண்ணீர், செம்பூண்டி - எல்.எண்டத்துார் சாலையிலுள்ள பழைய தரைப்பாலத்தைக் கடந்து செல்கிறது.ஆண்டுதோறும் மழைக்காலங்களில், அதிகப்படியான நீர் வரத்து காரணமாக, இந்த தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுகிறது.இந்த பாலத்திலுள்ள கருங்கற்களும் பெயர்ந்து விழுந்து, சேதமடைந்து உள்ளது.மிகவும் பழமையான இந்த தரைப்பாலத்தை இடித்து அகற்றி, புதிதாக சதுர வடிவ பாலம் அமைக்க, செம்பூண்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில், கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இப்பகுதியை ஆய்வு செய்து, தரைப்பாலத்தில் சதுர வடிவ பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி