உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாழடைந்த மேல்நிலை தொட்டி; இடித்து அகற்ற வேண்டுகோள்

பாழடைந்த மேல்நிலை தொட்டி; இடித்து அகற்ற வேண்டுகோள்

பவுஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட விழுதமங்கலம் கிராமத்தில், குடியிருப்புப் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி உள்ளது. அது, தற்போது பயன்பாடின்றி சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, பாழடைந்த நிலையில் உள்ளது. புதிய குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையிலும், கைவிடப்பட்ட பழைய மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி அகற்றப்படவில்லை.பலத்த காற்று வீசினால், பழைய மேல்நிலை தேக்கத் தொட்டி இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கி.கணபதிராஜன்,பவுஞ்சூர்.சித்தேரி ஏரி நீர் துர்நாற்றம் தொற்றுநோய் பரவும் அபாயம்மதுராந்தகம் வட்டம், ஒரத்தி கிராமத்தில் சித்தேரி ஏரி உள்ளது. இந்த ஏரியில், தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக, தண்ணீர் நிரம்பி உள்ளது. தற்போது, ஏரியில் உள்ள தண்ணீர், பச்சை நிறத்தில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், கரையோர பகுதிகளில் தேங்கியுள்ள குப்பையில் கொசு உற்பத்தி அதிகமாகியுள்ளது. எனவே, ஏரி நீரை துாய்மைப்படுத்தி, சேர்ந்துள்ள குப்பையை அகற்ற வேண்டும்.அதோடு, ஏரியை சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் தெளித்து, நோய் தொற்று ஏற்படாதவாறு, இப்பகுதிவாசிகளை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.தனஞ்செழியன், ஒரத்திரேஷனில் பொருள் பற்றாக்குறைஅனுமந்தபுரத்தில் மக்கள் அவதிசிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் குளக்கரை அருகில் உள்ள நியாய விலைக்கடையில், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுக்கின்றனர்.காரணம் கேட்டால், வெளியூர்களில் இருந்து புதிதாக வந்துள்ள அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி செல்வதால், பொருட்கள் இல்லை என, ஊழியர்கள் கூறுகின்றனர்.அதனால், ஜி.எஸ்.டி., சாலையை கடந்து கூட்டுறவு வங்கி அலுவலக வளாகத்தில் உள்ள நியாய விலைக் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது.முதியவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் 1 கி.மீ., தொலைவு நடந்து சென்று, பொருட்களை வாங்கி துாக்கி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, குளக்கரை அருகில் உள்ள நியாய விலைக்கடையில், பொருட்கள் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.தமிழ்ச்செல்வன், சிங்கபெருமாள் கோவில்.சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும்சுற்றுலா வாகனங்களால் இடையூறுமாமல்லபுரத்தில் முக்கிய சிற்ப பகுதியான ஐந்து ரதங்கள் சிற்ப நுழைவாயிலை ஒட்டி, பிரதான சாலை உள்ளது. சிற்பங்களை காண வரும் பயணியரின் வாகனங்களை நிறுத்த, வாகன நிறுத்துமிடம் இருந்தும், சிற்ப வாயிற்பகுதியில் அத்துமீறி நிறுத்தப்படுகின்றன.வெண்புருஷம், கொக்கிலமேடு பகுதியினர், இவ்வழியே வாகனங்களில் செல்கின்றனர். சிற்ப வளாகத்திற்கு, பயணியர் சாலையின் குறுக்கில் கடந்து செல்லும் நிலையில், போக்குவரத்து நெரிசல் இடையே, விபத்து அபாயத்துடன் செல்கின்றனர்.வார இறுதி நாட்கள் உள்ளிட்ட பயணியர் அதிகரிக்கும் நாட்களில், இங்கு வாகனங்கள் நிறுத்தாமல் தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.பாலச்சந்திரன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ