வட்டாட்சியர் அலுவலகத்தில் சேதமான கழிப்பறையால் சிரமம்
செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் பொதுக்கழிப்பறை அமைக்கப்பட்டது.கழிப்பறையில் குழாய்கள் உடைந்து தண்ணீர் இல்லாமல் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.தற்போது ஜமாபந்தி நடந்து வருவதால் மனு அளிக்க வரும் மக்கள் சிரமப்படுகின்றனர்.ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சேதமடைந்துள்ள கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.