உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  நயினார்குப்பத்தில் சேதமான மின் கம்பங்களால் அபாயம்

 நயினார்குப்பத்தில் சேதமான மின் கம்பங்களால் அபாயம்

செய்யூர்: நயினார்குப்பம் கிராமத்தில் சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட, நயினார்குப்பம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு, கடப்பாக்கம் மின்பகிர்வுமனை சார்பாக மின் கம்பங்கள் நடப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நயினார்குப்பம் அத்திகுட்டை சாலை, காளியம்மன் கோவில் சாலை, ஆணையன் தோட்டம் சாலை, பழைய எல்லையம்மன் கோவில் சாலை, காசிபாட்டை உள்ளிட்ட சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து, சிமென்ட் கான்கிரீட் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசினால் மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளன. இதுகுறித்து, பலமுறை மின்வாரியத்தில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காமல் ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆகையால் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ