மேலும் செய்திகள்
மக்கி வீணாகி வரும் போலீஸ் பறிமுதல் வாகனங்கள்
03-Nov-2024
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி அடைந்து வருகின்றனர்.அச்சிறுபாக்கம் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் இரு மார்க்கத்திலும், புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதில், எலப்பாக்கம், திம்மாபுரம் பகுதியிலிருந்து, தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் புறவழிச்சாலை பகுதியில் வணிக வளாகங்கள், வங்கிகள், மளிகை கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ளன.இவற்றில், இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என, இடவசதி இல்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் வருவோர், வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.சிமென்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை லோடு ஏற்றி வரும் ஓட்டுனர்கள், புறவழிச்சாலையை ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்துகின்றனர்.இதனால், அச்சிறுபாக்கம், எலப்பாக்கம் பகுதிகளில் இருந்து வரும் அரசு பேருந்து மற்றும் புறவழிச்சாலையைப் பயன்படுத்துவோர், மிகவும் அவதி அடைகின்றனர்.எனவே, புறவழிச்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
03-Nov-2024