உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பயன்பாடற்ற சமையல் கூடத்தில் விஷப்பூச்சிகள் தங்கும் அபாயம்

பயன்பாடற்ற சமையல் கூடத்தில் விஷப்பூச்சிகள் தங்கும் அபாயம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, வேடந்தாங்கல் ஊராட்சி உள்ளது. இங்கு, பறவைகள் சரணாலயம் செல்லும் வழியில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.அங்கு, 260க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.பள்ளி வளாகத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமையல் கூடம், சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதன் காரணமாக, புதிதாக சமையல் கூடம் கட்டப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், பள்ளி வகுப்பறை கட்டடம் அருகே உள்ள சமையல் கூடம் பாழடைந்து உள்ளதால், விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறியுள்ளது.எனவே, பள்ளி மாணவ - மாணவியரின் நலன் கருதி, அசம்பாவிதம் ஏற்படும் முன், பயன்பாடு இன்றி உள்ள பழைய சமையல் கூடத்தை இடித்து அப்புறப்படுத்த, உரிய துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை