உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் மரண பள்ளங்களால் அவதி

மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் மரண பள்ளங்களால் அவதி

மதுராந்தகம்:மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஆபத்தான பள்ளங்களால் பயணியர், பேருந்து ஓட்டுநர்கள் அவதி அடைந்து வருகின்றனர். மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சூனாம்பேடு, செய்யூர், லத்துார், இடைக்கழி நாடு, பவுஞ்சூர், அச்சிறுபாக்கம், அனந்தமங்கலம், ஒரத்தி, வேடந்தாங்கல், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு மார்க்கம் மற்றும் திண்டிவனம் மார்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள், தற்காலிக பேருந்து நிலையத்தில் உள்நுழையும் பகுதியில் இரண்டு இடங்களில் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. மேலும், பேருந்து நிலைய வளாகப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி உள்ளதால், பேருந்துகள் இயக்க முடியாத சூழல் உள்ளதாக ஓட்டுநர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தில் உள்ள பள்ளங்களில், மண் கொட்டி சமன்படுத்த வேண்டும் என, பயணியர், பேருந்து ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை