உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஐ.டி.ஐ.,யில் பழைய வீடுகள் இடித்து அகற்ற கோரிக்கை

ஐ.டி.ஐ.,யில் பழைய வீடுகள் இடித்து அகற்ற கோரிக்கை

செங்கல்பட்டு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பழுதடைந்துள்ள வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், செங்கல்பட்டு அடுத்த மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது.இந்த தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், 1963ம் ஆண்டு, 10க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டன. இங்கு, ஊழியர்கள் தங்கி பணிபுரிந்து வந்தனர்.கடந்த சில ஆண்டுகளாக இந்த வீடுகள் பராமரிப்பின்றி, ஊழியர்கள் தங்க முடியாத சூழல் ஏற்பட்டது. பழுதடைந்த வீடுகளில் முட்புதர்கள் வளர்ந்து, விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.நிலைய வளாக பகுதியில், அச்சத்துடன் மாணவர்கள் விளையாடுகின்றனர். எனவே, ஊழியர்கள் நலன் கருதி, புதிய வீடுகள் கட்டித்தரவும், பழைய வீடுகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை