கோவில் சுற்று சுவரில் விரிசல் சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை
மறைமலைநகர், சிங்கபெருமாள் கோவில் அருகில் ஆப்பூர் மலைக்கோவில் சுற்று சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் கிராமத்தின் மலை மீது பழமையான நித்ய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்னை, தாம்பரம், மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில் மலை மீது உள்ளதால் அதன் முகப்பு பகுதியில் பெரிய பள்ளத்தாக்கு உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 20 ஆண்டுகளுக்கு முன் இங்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டது. தற்போது இந்த சுவர் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் கண்டு அச்சம் அடைந்து உள்ளனர். சுவர் இடிந்து ஆபத்து ஏற்படும் முன் சுவர்களில் ஏற்பட்டு உள்ள விரிசல்களை சரி செய்ய வேண்டும் என. பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.