உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் ரேஷன் கடையில் வேட்டி, சேலைக்கு அலைக்கழிப்பு

வண்டலுார் ரேஷன் கடையில் வேட்டி, சேலைக்கு அலைக்கழிப்பு

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சி, ஓட்டேரி விரிவு பகுதியில் எட்டாவது பிரதான சாலையில் ரேஷன் கடை உள்ளது.இந்த ரேஷன் கடையில் கடந்த சில நாட்களாக, பொங்கல் தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இங்கு வேட்டி, சேலைகள் வழங்காமல் குடும்ப அட்டைதாரர்களை அலைக்கழிப்பதாக, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:வண்டலுார் ஊராட்சிக்கு உட்பட்ட, ஓட்டேரி எட்டாவது பிரதான சாலையில், ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் 1,500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கி பயனடைந்து வருகின்றனர்.குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டிய வேட்டி சேலைகளை வழங்காமல், முதியவர்களை அலைக்கழிக்கின்றனர். மறுநாள் வரும்படி கூறி அனுப்பும் நிலையில், அவ்வாறு வரும்போதும், வேட்டி, சேலை இன்னும் வரவில்லை எனக் கூறி அனுப்புகின்றனர்.இதனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்தும், வேட்டி, சேலைகள் வாங்காமல் திரும்பிச் செல்கின்றோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து, ரேஷன் கடை ஊழியரிடம் கேட்ட போது,'இங்கு வேட்டி, சேலைகள் குறைவாக வந்துள்ளன. வந்ததை பயனாளிகளுக்கு கொடுத்து விட்டோம். இன்னும் வரவேண்டி உள்ளது. வந்தவுடன் வழங்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !