உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி வெண்ணாங்குப்பட்டில் அச்சம்

பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி வெண்ணாங்குப்பட்டில் அச்சம்

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி 21வது வார்டுக்கு உட்பட்ட வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக கட்டப்பட்ட 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் வாயிலாக, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக பொதுமக்களுக்கு தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு இல்லாமல் நாளடைவில் பழுதடைந்து, சிமென்ட் கான்கிரீட் உதிர்ந்து, தண்ணீர் கசிவு ஏற்படுகிறது.மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பக்கவாட்டில் ஆலமரம் வளர்வதால், தொட்டியில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால், பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, வெண்ணாங்குப்பட்டு பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி