உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய கூட்டம்

மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய கூட்டம்

திருப்போரூர்; தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒன்றிய கூட்டம், நேற்று திருப்போரூரில் நடந்தது.இதில், சங்கத்தின் ஒன்றிய தலைவர் லிங்கன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலர் அருள்ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், 100 நாள் வேலை மற்றும் சம்பள பாக்கி, ஏ.ஏ.ஒய்., ரேஷன் அட்டை,இலவச பட்டா, இதுவரை வராத பாதுகாவலர் உதவித்தொகை 1,000 ரூபாய் ஆகியவற்றிற்காக, மனு அளிக்க முடிவானது.அதோடு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோரிடம் அடாவடியாகவும் மரியாதை குறைவாகவும் நடந்து கொள்ளும் திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் செல்லும் அரசு பேருந்து நடத்துநரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சாலை வசதி சரியில்லாத காரணத்தால் நிறுத்தப்பட்ட திருப்போரூர் - எடர்குன்றம் வழியாக, திருக்கழுக்குன்றம் செல்லும் அரசு பேருந்து மீண்டும் இயக்க வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ