உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய சாலைகள் பெயர்ப்பு மாமல்லையில் அதிருப்தி

புதிய சாலைகள் பெயர்ப்பு மாமல்லையில் அதிருப்தி

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், மாமல்லபுரம், வெண்புருஷம், பூஞ்சேரி, பவழக்காரன்சத்திரம், தேவனேரி ஆகிய பகுதிகளுடன், 15 வார்டுகள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலைகள் சீரழிந்தன.சில இடங்களில் மண் பாதையே, தற்போது வரை பயன்பாட்டில் உள்ளன. சீரழிந்த சாலைகளுக்கு மாற்றாக, புதிய சாலை, மண் பாதையில் சாலை அமைக்கக்கோரி, பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகமும், புதிய கான்கிரீட் சாலை, கான்கிரீட் கல் சாலை என அமைத்துள்ளது. புதிய சாலை அமைக்கும் போது, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை இணைப்பு ஆகிய பணிகளை செய்த பிறகே, சாலை அமைக்க வேண்டுமென, நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டனர்.ஆனால், அதை அலட்சியப்படுத்திய பேரூராட்சி நிர்வாகம், அவசர கோலத்தில் சாலை அமைத்தது. தற்போது குடிநீர், பாதாள சாக்கடை ஆகிய பணிகளுக்காக, சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்ட புதிய சாலையை பெயர்த்து சீரழிக்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதிவாசிகள், பேரூராட்சி ஊழியர்களிடம் தகராறு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை