வண்டலுாரில் மின் தடையால் அவதி
கூடுவாஞ்சேரி:வண்டலுார் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சில நாட்களாக தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அதனால், அப்பகுதிவாசிகள் இரவு நேரங்களில் துாக்கமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். எனவே, எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிவாசிகள் கூறினர்.