உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாவட்ட ரேங்கிங் கேரம் செரியன் நகர் சிறுமியர் தகுதி

மாவட்ட ரேங்கிங் கேரம் செரியன் நகர் சிறுமியர் தகுதி

சென்னை,சென்னை மாவட்ட கேரம் சங்கம் ஆதரவில், டான்பாஸ்கோ இளைஞர் மையம் சார்பில், மாவட்ட அளவிலான 'ரேங்கிங்' எனும் தரவரிசை கேரம் போட்டி, பிராட்வேயில் உள்ள மையத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 438 வீரர், வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.நேற்று நடந்த 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியருக்கான காலிறுதியில், செரியன் நகர் கேரம் கிளப் சிறுமி டெனினா, 22 - 04, 22 - 04 என்ற கணக்கில், மற்றெரு செரியன் நகர் கிளப் சிறுமியான சுபாஸ்ரீயை தோற்கடித்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.மற்றொரு போட்டியில், ஜனனி 14 - 07, 8 - 12, 21 - 09 என்ற கணக்கில் மோத்திகாவையும், செரியன் நகர் கிளப் சஹானா, 24 - 00, 21 - 00 என்ற கணக்கில் சி.பி.எப்., வீராங்கனை ஸ்ருதிகாவையும் தோற்கடித்தனர்.பி.எஸ்.சி.ஏ., கிளப் தனுஷ்ஸ்ரீ, 19 - 00, 21 - 05 என்ற கணக்கில் செரியன் நகர் கிளப் பிரகதியை வீழ்த்தினார். டிச., 1 வரை போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை