உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

திருப்போரூர்:தி.மு.க., காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், திருப்போரூர் சட்டசபை தொகுதி சார்பில், அவசர ஆலோசனைக் கூட்டம், கேளம்பாக்கம் அருகே தையூர் தனியார் விடுதியில், நேற்று நடந்தது.காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலரும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான அன்பரசன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக, நீலகிரி எம்.பி.,யும், தி.மு.க., துணை பொதுச்செயலருமான ஆ.ராசா பங்கேற்று, வரும் 2026 சட்டசபை தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.கூட்டத்தில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலர் வெண்பேடு ரமேஷ், ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ