உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழுதான மின்கம்பங்களால் கூணங்கரணையில் அபாயம்

பழுதான மின்கம்பங்களால் கூணங்கரணையில் அபாயம்

சித்தாமூர் அடுத்த பெரியகயப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கூணங்கரணை கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூணங்கரணை கிராமத்தில், செல்லியம்மன் கோவில் அருகே குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின் விநியோகம் செய்ய, மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதை, தாங்கி நிற்கும் மின்கம்பங்கள் பழுதடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்புக்கம்பிகள் வெளியே தெரியும்படி உள்ளன. பலத்த காற்று வீசினால், மின்கம்பம் முறிந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சு.சிவா, சித்தாமூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !