உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  காரை திருடிய ஓட்டுநர் கைது

 காரை திருடிய ஓட்டுநர் கைது

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சி ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் தரணிகுமார், 40. கேளம்பாக்கம், சாத்தங்குப்பத்தைச் சேர்ந்த முகேஷ், 30, என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், தரணிகுமார் வீட்டில் கார் ஓட்டும் வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 8ம் தேதி, ஓட்டுநர் முகேஷ், காரை சுத்தம் செய்யப் போவதாகக் கூறி எடுத்துச் சென்றுள்ளார்.நேற்று முன்தினம் வரை மீண்டும் வரவில்லை. அவரது மொபைல்போனுக்கு தொடர்பு கொண்ட போது, இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து தரணிகுமார், கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். இதன்படி முகேஷின் மொபைல் போன் சிக்னலை வைத்து, நேற்று முன்தினம் இரவு போலீசார் அவரை கைது செய்தனர். காரையும் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை