உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை வளைவில் ஜல்லி கற்கள் சறுக்கி விழும் வாகன ஓட்டிகள்

சாலை வளைவில் ஜல்லி கற்கள் சறுக்கி விழும் வாகன ஓட்டிகள்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் பிரதான சாலையில், காயரம்பேடு சந்திப்பு வளைவில், சாலை நடுவே சிதறிக்கிடக்கும் ஜல்லிகற்களால் இருசக்கர வாகன ஓட்டிகள், சறுக்கி விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் வரையிலான 11 கி.மீ., நீள சாலையில், மணி நேரத்திற்கு 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த சாலையின் அகலம் பல இடங்களில் குறுகி, சுருங்கி உள்ளது.தவிர, கூடுவாஞ்சேரி முதல் காயரம்பேடு சந்திப்பு வரையில், சாலையின் பல இடங்களில் உள்ள பள்ளங்களால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.வாகன ஓட்டிகள் கூறியதாவது:எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், காயரம்பேடு சந்திப்பு, சாலை திருப்பத்தில் சிதறிக் கிடக்கும் ஜல்லிக் கற்களை அகற்றி, சாலையை செப்பனிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ