மேலும் செய்திகள்
விவசாயி மர்ம மரணம் : போலீசார் விசாரணை
24-Jun-2025
குரோம்பேட்டை:பம்மல், மூங்கில் ஏரி, சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் சிவராமன், 39. நாகல்கேணியில் விளம்பர பலகை செய்யும் கடை நடத்தி வருகிறார்.சில நாட்களுக்கு முன், மாலை நேரத்தில், அவரது கடை முன், அதே பகுதியை சேர்ந்த இருவர், மது அருந்தியுள்ளனர். அவர்களை, சிவராமன் எச்சரித்து, அங்கிருந்து விரட்டியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம், நண்பர்களுடன் வந்த இருவரும், சிவராமன் கடைக்கு சென்று, அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த அவர், பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்த புகாரின்படி, குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பெருங்களத்துாரை சேர்ந்த ரவி, 27, பம்மலை சேர்ந்த வேலன், 26, அத்தீப், 27, குரோம்பேட்டையை சேர்ந்த சிவகுமார், 26, திருநீர்மலையை சேர்ந்த அருண்குமார், 28, ஆகிய ஐந்து பேரை, நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
24-Jun-2025